Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற கவுன்சிலர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கவுன்சிலர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னங்காரணி ஊராட்சியில் அருண் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மன்ற 6- வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். மேலும் அருண் பாண்டி தனியார் நிறுவனத்தில் ஊழியராகவும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அருண் பாண்டி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அருண்பாண்டி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் திருநின்றவூர்- பெரியபாளையம் நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக அருண்பாண்டி சடன் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த அருண்பாண்டி சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |