நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் தனியார் குடியிருப்பில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பூட்டிவிட்டு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சிவகுமார் அதிர்ச்சியடைந்தார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை, ஒரு லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிவகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.