பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எழில் நகரில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து புவனேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.