படகு கவிழ்ந்ததில் ஆற்றில் மூழ்கி 19 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில், ரஹீம் யார் கான் மாவட்டத்தில் மோட்ச்கா பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த 100 பேர் ராஜன்பூர் பகுதியில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றனர். இவர்கள் திருமண நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு படகில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். இவர்கள் இந்தோஸ் ஆற்றில் உள்ள பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தின் இடையே சென்று கொண்டிருந்தனர்.
இந்த படகு திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. இது தொடர்பாக காவல்துறையினருக்கும். மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஆற்றில் மூழ்கி 19 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.