Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“திருமண நிகழ்ச்சியில் திக் திக்” ஒரு ரவுடிக்கு பயந்து மற்றொரு ரவுடிக்கு பாதுகாப்பு கொடுத்த போலீஸ்….. மாமல்லபுரத்தில் பெரும் பரபரப்பு…..!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் லெனின், நரேஷ் பாபு, மேத்யூ ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களின் மீது அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இவர்கள் 3 பேருக்கும் எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேத்யூவின் நண்பரான சூர்யாவை லெனின் திடீரென படுகொலை செய்துள்ளார். இதனால் புதிதாக 3 பேருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேத்யூ தன்னுடைய நண்பரின் படுகொலைக்கு காரணமான லெனினை பழிவாங்க வேண்டும் என திட்டம் தீட்டினார். இந்நிலையில் லெனினின் சித்தப்பா மகனான நரேஷ் பாபுவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இவருடைய திருமண நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள சூளேரிகாடு பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டு லெனின் மற்றும் நரேஷ் பாபுவை கொலை செய்வதற்கு மேத்யூ மற்றும் அவரின் நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த காரியத்தை கண்டிப்பாக நடத்திக் காட்டுவேன் என மேத்யூ சபதம் எடுத்துக் கொண்டுள்ளார். இதனால் திருமண மண்டபத்தில் பதட்டம் அதிகரித்தது. இதன் காரணமாக  பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் மண்டபத்தை சுற்றி வளைத்தனர். இதனையடுத்து மண்டபத்திற்குள் வந்த அனைவரையும் தீவிர சோதனைக்கு பிறகே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அனுமதித்தனர். ஒரு வழியாக திருமணம் எவ்வித பிரச்சனையும் இன்றி சுமுகமாக நடைபெற்றது. மேலும் லெனின் மற்றும் நரேஷ் பாபு மீது ஏற்கனவே காவல்துறையில் பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கும்போது அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விடாமல், ஒரு ரவுடிக்கு பயந்து மற்றொரு ரவுடிக்கு காவல்துறையினர் பாதுகாப்பு கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |