புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் இன்று காலை பட்ஜெட் உரையாற்றினார். இதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறையில் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 2021- 2022 ஆம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். ரூ. 9, 924 கோடிக்கான பட்ஜெட்டை புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ரங்கசாமி.
அதில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார் . புதுச்சேரி மாநிலத்தில் ஆதி திராவிட மணமகள் நிதியுதவி திட்டம் ரூ. 75,000 இருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தப்படும் என்றும், பாட்கோ கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.