வாரணாசியில் உள்ள கங்கையாற்றில் திருமணப் அதிகாரத்திற்காக தீபமேற்றி நடிகர் சிம்பு வழிபட்டார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிலம்பரசன் என்கிற சிம்பு. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாநாடு படத்திலும் சிம்பு நடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதற்கடுத்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்திலும் நடிப்பதாக ஒப்பந்தமிட்டுள்ளார். இந்நிலையில் திடீரென சிம்பு உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு சென்று அங்கு பிரசித்திப் பெற்ற கங்கையாற்றில் தீபமேற்றி வழிபாடு நடத்தினார்.இவ்வாறு கங்கையாற்றின் தீப வழிபாடு செய்வது திருமணத்திற்கான பரிகாரம் என்று ரசிகர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது. சிம்பு கங்கையாற்றில் விளக்கேற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது.