மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்கோவில் அக்ரஹாரம் பகுதியில் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சரத் உள்பட 20 பேர் துறையூரில் இருக்கும் திருமண மண்டபத்தில் மணவறை அலங்காரம் செய்வதற்காக வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது சரத் ஒரு பெரிய இரும்பு பைப்பை தூக்கிச் சென்றுள்ளார். அந்த பைப் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.