கர்நாடகா மாநிலம் உடுப்பு மாவட்டம் ஹவாஞ்சே எனும் பகுதியில் 23 வயதான ஜோஸ்னா லூயிஸ் என்ற பெண் தன் உறவினர் வீட்டிற்கு சென்று உள்ளார். இந்த நிலையில் அங்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோஸ்னா லூயிஸ் நடனம் ஆடிக்கொண்டே சென்றுள்ளார். அப்போது திடீரென்று அப்பெண் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்சியடைந்த உறவினர்கள் ஜோஸ்னா லூயிசை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு ஜோஸ்னா லூயிசை பரிசோதனை செய்ததில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் இறப்புக்கான காரணம் மாரடைப்பு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய காலத்தில் இது போன்ற மாரடைப்பு சம்பவங்கள் இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.