Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியில் பட்டதாரியான சந்தியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான ராஜா என்பவரை காதலித்து கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் வில்லிவாக்கத்தில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உறவினர்கள் முன்னிலையில் சந்தியா மற்றும் ராஜாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் சந்தியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தியாவின் தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக தனது மகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |