ரீமாசென் திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் புகைப்படங்களை பகிந்துள்ளார்.
நடிகை ரீமாசென் “செல்லமே” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். ரீமா சென் 2001ம் வருடம் மாதவனுக்கு ஜோடியாக “மின்னலே” திரைப்படத்தில் நடித்ததற்கு சிறந்த அறிமுக நடிகை விருது கிடைத்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து பகவதி, தூள், திமிரு, கிரி, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் என்று அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்தார். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ஹிட்டாகியுள்ளது. இ
வர் கடைசியாக “சட்டம் ஒரு இருட்டறை” திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் ரீமாசென் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் ரீமாசென் தனக்கு திருமணம் ஆகி பத்து வருடங்களாக உள்ள நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “A decade of US Happy 10th Anniversary My Everything.” என குறிப்பிட்டு பத்தாம் ஆண்டு திருமண நாளில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ரீமாசென்.