Categories
தேசிய செய்திகள்

திருமண வாழ்க்கை: யூஸ் பண்ணிட்டு தூக்கி போடுறாங்க!…. வருத்தம் தெரிவித்த நீதிமன்றம்….!!!!

நம் இளைய தலைமுறையினர் திருமணத்தை ஒரு கடமையாகக் கருதுகின்றனர். தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ திருமணத்தையே தவிர்க்கிறார்கள் என கேரள உயர்நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் நுகர்வோரின் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் கலாசாரமும் திருமண உறவுகளில் கொண்டு வரப்படுவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டு உள்ளது. 38 வயதாகும் மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கேட்டு 34 வயது நபர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார். 10 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர்.

தற்போது அந்த நபருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் மனைவியை துன்புறுத்தி வரும் கணவர் விவாகரத்துக் கேட்டும் கீழமை நீதிமன்றங்கள் மனுவை நிராகரித்துவிட்டது. பின் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்த கணவரது மனுவை விசாரித்த நீதிபதிகள், இப்போதைய காலக்கட்டத்தில் இளைய தலைமுறையினர் திருமணத்தை ஒரு கடமையாக பார்க்கின்றனர். எந்த இடையூறும் இன்றி வாழ திருமணத்தை தவிர்க்கிறார்கள். அத்துடன் மனைவி என்ற வார்த்தையை கவலையை அழைத்து வருபவர் என வர்ணிக்கிறார்கள்.

நுகர்வோரின் பழக்கமான பயன்படுத்தி தூக்கியெறியும் கலாசாரத்தையும் இதில் கொண்டு வந்துவிடுகிறார்கள். ஒன்றாக சேர்ந்துவாழும் நடைமுறை அதிகரித்து, பிடிக்கவில்லையெனில் குட் பாய் சொல்லி பிரிந்துவிடுகிறார்கள் என தங்களது கருத்தை வெளியிட்டனர். முன்பு எல்லாம் கேரளத்தின் குடும்பங்களை நன்கு பிணையப்பட்ட உறவுகள் கொண்ட குடும்பங்களைப் பற்றி கூறுவார்கள். எனினும் சுயநலத்துக்காக இப்போது திருமண பந்தங்களை உடைத்து, தங்களது குழந்தைகளைப் பற்றி எந்த அக்கறையும் கொள்ளாத தலைமுறையாக உருவாகி வருகிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |