திருமண நிகழ்விற்காக விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளை பிரிட்டன் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
பிரிட்டனில் திருமணங்கள் மற்றும் மற்ற விழாக்களை நிகழ்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற விழாக்களில் ஆறு பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. அதனால் மார்ச் 29 முதல் திருமண விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் ஆறு பேர் அல்லது இரண்டு வீடுகள் வரை பங்கேற்றுக் கொள்ளலாம்.
மேலும் ஏப்ரல் 12 முதல் கொரோனா தொற்று குறைந்த பகுதியில் 15 பேர் வரை திருமண விழாக்களில் கலந்து கொள்ளலாம் . இதனைத் தொடர்ந்து மே 17 முதல் 30 பேர் வரை திருமண விழா மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை பாதுகாப்பான இடங்களில் வைத்து நடத்திக் கொள்ளலாம். ஜூன் 21 முதல் திருமணம் மற்றும் உள்ளூர் விழாக்களுக்கு விதிக்கப்பட்ட எல்லா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என்று கூறப்படுகிறது .