சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையிருப்பு கிராமத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபி (17) என்ற மகன் இருந்தார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் கருப்பையா மகன் சதீஷ் என்பவரும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு அதன் பின் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்த கோபி திடீரென பிரேக் போட்டதில் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.
அதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சதீஷ் பரிதாபமாக இறந்து விட்டார். இதையடுத்து கோபி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.