Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திருமண விழாவிற்கு சென்றவருக்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… பெரம்பலூரில் பரபரப்பு..!!

பெரம்பலூரில் வீடு புகுந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கை.களத்தூர் காலனியில் நந்தீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 20-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதையடுத்து நந்தீஷ்குமார் நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பரிசோதனை செய்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் மற்றும் 35 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து க.களத்தூர் காவல் நிலையத்தில் நந்தீஷ்குமார் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களை வைத்து அங்கு சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து நந்தீஷ்குமாரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருட்டு போன பணம் மற்றும் நகை கேரளாவில் வசித்து வரும் தனது சகோதரியான சசிகலா என்பவருக்கு சொந்தமானது என்று கூறுகிறார். மேலும் பணம் மற்றும் நகை குறித்த விவரம் சசிகலாவுக்கு முழுமையாக தெரியும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சசிகலாவிற்கு இது குறித்து தகவல் தெரிவித்து அவரை நேரில் வந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியுள்ளார். மேலும் திருட்டுப்போன பணம் மற்றும் நகை மதிப்பு குறித்து நந்தீஷ்குமார் கூறுவது சரிதானா? என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |