பங்குனி மாத சர்வ அமாவாசை பூஜை நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே பிரசித்தி பெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத சர்வ அமாவாசை பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பன்னீர், பால், பழம், சந்தனம், தீர்த்தம், விபூதி, புஷ்பம் ஆகிய 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது.
அதன்பின்னர் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்தில் வழிபாடு செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் அரசு வழிகாட்டுதல்படி வழங்கப்பட்டது.