தொல் திருமாவளவன் சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில் தமிழ்நாடு என்னும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என்று பேசினார். இவருடைய இந்த கருத்தானது சர்ச்சையானது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பேசுகையில், தனித் தமிழ்நாட்டை வெட்டி எடுப்பது தான் தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு என்று பேசிய திருமாவளவனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர், தமிழகத்தில் மொழி பிரிவினைவாதத்தை ஏற்படுத்த சிலர் நினைக்கின்றனர். வாரணாசியில் நடக்கும் தமிழ் சங்கம் நிகழ்ச்சியை அங்குள்ளவர்கள் யாரும் எதிர்க்கவில்லை. காரணம் மொழி பிரிவினை அம்மக்களிடையே ஊட்டப்படவில்லை என்றார்.