செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராதாரவி, அடுத்த தேர்தலில் எல்லாம் பிஜேபி குறைந்தது 80 சீட்டுகளுக்கு பக்கத்தில் நெருங்கும் என்பதை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். என்னடா 80 சீட்டு சொல்கிறானே ஆளுங்ககட்சி வரதா என்றால் நாம் இல்லையென்றால் யாரும் ஆள முடியாது. அந்த அளவுக்கு கொண்டு வந்து விடுவோம். ஏனென்றால் பிஜேபி வந்து சாதரணமான இயக்கம் அல்ல. ஐயா வாஜ்பாயை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். இந்திராகாந்தி அம்மா காங்கிரஸ் தலைவி, பிஜேபியின் தலைவர் ஐயா வாஜ்பாய் அவர்கள்.
ஆனால் இந்தியாவிற்கு ஒரு பிரதிநிதி வேணும், வெளிநாட்டுக்கு… இந்தியாவிற்காக ஒரு ஆள் செல்ல வேண்டும், யாரை அங்கு அனுப்பலாம் என்றவுடன் இந்திராகாந்தி அம்மையார் காங்கிரசில் இருந்து யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை, வாஜ்பாய் அவர்களை தான் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். அந்த அளவிற்கு பெரிய அறிவாளி, அந்த அளவிற்கு படித்தவர்கள், பண்பாளர்கள் இருக்கும் இயக்கம் பிஜேபி.
சும்மா சொல்கிறவர்கள் சொல்வார்கள் இது பிராமணர்கள் கட்சி என்று, ஐயா மோடிஜி அவர்கள் பிராமணர் அல்ல, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், ஐயா அமித்ஷா அவர்கள் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர். நான் எதற்காக சொல்கிறேன் என்றால் இங்கே தமிழக பிஜேபி தலைவராக இருந்த அத்தனை பேரையும் எடுத்து கொள்ளுங்கள்… இன்று இருக்கும் ஒப்பற்ற தலைவராக இருக்ககூடிய சகோதரர் அண்ணாமலை வரைக்கும் எடுத்து கொள்ளுங்கள்…. யாரவது பிராமணர்கள் இருந்து இருக்கிறார்களா ? இது பிராமணர்கள் கட்சி கிடையாது.
பிராமணர்கள் மட்டும் யாரு ? பிராமணர்கள் இந்தியர்கள் இல்லையா ? அவர்கள் மட்டும் என்ன தனியா இருக்கின்றார்களா ? இவனா சொல்கிறார்கள் தனியா இருக்காங்க என்று. சகோதரர் திருமாவளவனுக்கு சொல்கிறேன், நான் அவரை தவறாக சொல்லவில்லை. அவர்களுடைய இனத்தில் இருந்து யாரையாவது திமுகவுக்கு தலைவராக கொண்டு வர முடியுமா? ஆனால் பிஜேபியில் எல். முருகன் அவர்களை தலைவராக கொண்டு வந்தார்கள். இன்று மத்திய அமைச்சராக இருக்கின்றவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர், இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.