Categories
மாநில செய்திகள்

திருமூர்த்தி அணையில் நீர் திறப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி…!!!

திருமூர்த்தி அணையில் வருகின்ற 28 ஆம் தேதி முதல் தண்ணீர் திறப்பதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாலாறு படுகை விவசாயிகள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசன பகுதிகளுக்கு வருகின்ற 28 ஆம் தேதி முதல் மொத்தமாக 8700 கன அடி நீர் திறந்து விட நான் உத்தரவிடுகிறேன்.

அதன் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் வட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். அதுமட்டுமன்றி இந்த நீரை விவசாயிகள் அனைவரும் சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மையை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |