Categories
தேசிய செய்திகள்

“திரும்பி வந்துட்டேன்னு சொல்லு”… பெருமிதத்துடன் ரத்தன் டாட்டா ட்விட்… வைரலாகும் புகைப்படம்…!!

ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமம் வாங்கியுள்ளது. இந்நிலையில் ரத்தன் டாட்டா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெ.ஆர்.டி.டாடா வின் பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசிடமிருந்து டாட்டா குழுமம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதுதொடர்பாக ரத்தன் டாடா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: ஏர்-இந்தியா நிறுவனத்திற்கான ஏலத்தை டாட்டா குழுமம் வென்றது மகிழ்ச்சியான செய்தியாகும். ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் கட்டியெழுப்ப கடுமையான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் வெல்கம் பேக் ஏர் இந்தியா என இந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

ஏர் இந்தியா நிறுவனத்தை ஜெ.ஆர். டி.டாடா அவர்கள் 1932 ஆம் ஆண்டு தொடங்கினார். அப்போது அந்நிறுவனம் டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.அதன்பிறகு 1946 ஆம் ஆண்டு நிறுவனம் ஏர் இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1948 ஆம் ஆண்டு சர்வதேச விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியது. அப்போது மத்திய அரசு ரூ 49 சதவீத பங்குகளும், டாடாவுக்கு 25 சதவீத பங்குகளும், இதர பொதுமக்களிடமும் இருந்தது. அதன் பிறகு கடந்த 1953 இல் இந்நிறுவனம் தேசிய மயமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |