நடிகர் ரஜினியின் அரசியல் வருகை பற்றி மு.க.அழகிரி வாழ்த்துக்கள் அன்பு சூப்பர் ஸ்டார் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சில நிமிடங்களிலேயே திமுகவின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் திமுக தலைவர் ஸ்டாலினின் சகோதரருமான முக. அழகிரி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “வாழ்த்துக்கள் அன்பு சூப்பர் ஸ்டார். திரும்ப வந்துட்டேன்னு சொல்லு… மாற்றுவோம் எல்லாத்தையும் மாற்றுவோம்” என்று வரவேற்றார். இது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது.