Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திரும்ப பெறபட்ட வாகனம்.… பணியில் சிக்கல்…. பொதுமக்கள், போலீசார் கோரிக்கை…!!

வால்பாறை போலீஸ் வாகனம் திரும்ப வழங்க வேண்டும் என்று பொதுமக்களும், காவல் துறையினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம், வால்பாறை மலைப்பகுதியில் வால்பாறை, கடப்பாறை, மூடீஸ், சேக்கல்முடி என நான்கு காவல் நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த நான்கு காவல் நிலையங்களிலும் 2 போலீஸ் வண்டி மட்டும் உள்ளது. அதில் ஒன்று வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் மற்றொன்று  மூடீஸ் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் இருந்தது.

ஆனால் கடந்த 25 வருடங்களாக வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரே ஒரு வண்டி மட்டுமே இருந்ததால் கூடுதலாக ஒரு வாடகை வண்டியை போலீசார் பயன்படுத்தி வந்தனர். இதனால் வழக்குப்பதிய வந்தவர்களிடம் வாடகை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் பயன்படுத்திக் கொள்கின்ற வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பத்தாம் தேதி உயர் போலீஸ் அதிகாரி உத்தரவின்பேரில் “டவுன் பேட்ரோல்” என்ற பெயரில் போலீஸ்க்கு வண்டி கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களுக்கும் வால்பாறை பகுதி போலீசாருக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்நிலையில் டவுன் பேட்ரோல் வண்டியை காவல்துறை உயரதிகாரிகள் திரும்ப வாங்கிக் கொண்டார்கள். இதனால் இரவு நேரங்களில் ரோந்து பணிக்கு காவல்துறையினர் செல்வதற்கும், வழக்கு சம்பந்தமாக விசாரிக்கவும், எஸ்டேட் பகுதிக்கு உரிய நேரத்திற்கு செல்வதற்கும், விபத்து ஏற்படும்போது போவதற்கும், சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஆதலால் வால்பாறை மலைப்பகுதியில் உள்ள மக்களின் நலன் கருதி காவல்துறையினர் பயன்படுத்துவதற்கு வசதியாக மீண்டும் வண்டியை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வால்பாறை பொதுமக்களும், வால்பாறை, சேக்கல்முடி, முடீஸ், காடம்பாறை காவல்துறையினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |