கனரக லாரி சாலையின் குறுக்கே நின்றதால் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியிலிருந்து லோடு ஏற்றிய கனரக லாரி வெலிங்டனுக்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் குடுமனை பகுதியில் இருக்கும் குறுகிய வளைவில் ஓட்டுநர் லாரியை திருப்ப முயற்சி செய்துள்ளார். ஆனால் திரும்ப முடியாமல் லாரி சாலையோர தடுப்பு சுவரில் மோதி குறுக்கே நின்றதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றுள்ளது.
மேலும் அந்த இடத்தில் ஒன்னதலை ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ளதால் பக்தர்களின் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிவிட்டது. இதனையடுத்து நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு லாரி ஓட்டுனர் வாகனத்தை ஸ்டார்ட் செய்து பின்னோக்கி எடுத்துவிட்டார். அதன்பிறகு லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இதனால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.