Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திரும்ப முடியாமல் நின்ற லாரி…. 3 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து…. மலைப்பாதையில் பரபரப்பு…!!

லாரி வளைவில் திரும்ப முடியாமல் நின்றதால் மலைப்பாதையில் 3 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பகல் நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று காலை கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி திம்பம் மலைப்பாதையில் 15-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயற்சி செய்துள்ளது. அப்போது பாதை குறுகியதாக இருந்ததால் திரும்ப முடியாமல் லாரி அப்படியே நின்றது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளது. இதனை பார்த்ததும் மற்றொரு லாரி ஓட்டுனர் திரும்ப முடியாமல் நின்ற லாரியை இயக்கி இயல்பு நிலைக்கு கொண்டுவந்தார். அதன்பின்னரே அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. இதனால் அங்கு சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |