தம்பியை சுட்டு கொன்ற அண்ணணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கரிப்பூர் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான ஜெகதீஷன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோதண்டராமன் என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் கோதண்டராமன் தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு அண்ணனிடம் கேட்டுள்ளார். ஆனால் ஜெகதீஷன் சிறிது நாட்கள் கழித்து பிரித்து தருவதாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் கோதண்டராமன் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தனது அண்ணனிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகதீஷன் தான் வைத்திருக்கும் கைத்துப்பாக்கியால் கோதண்டராமனை சரமாரியாக சுட்டுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த கோதண்டராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோதண்டராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் அவரின் உறவினர்கள் சாலையில் கம்புகளை போட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் கோதண்டராமனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜெகதீஷனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.