திருவண்ணாமலையில் உள்ள அரசு பள்ளியில் நாட்டு நல பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்க பெற்றோர் கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். மேலும் நாட்டுநல பணி திட்ட அலுவலர் வரவேற்றார். இதன் பின்னர் முகாமை தொடங்கி வைத்த பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தூய்மைப்படுத்தும் பணிகளுக்கான உபகரணங்கள், சீருடைகளை வழங்கினார்.
இதன் பின் உரையாற்றிய அவர் அனைவரும் இந்த முகாமில் தூய்மைப்படுத்துதல் பணி, ஹோமியோபதி மருத்துவம், வன உயிரினங்கள் முக்கியத்துவம், யோகாவின் முக்கியத்துவம், சட்டப் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் கடமைகள் மற்றும் பேரிடர் மேலாண்மை பற்றி மாணவர்களுக்கு அனைத்து நாட்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட இருக்கின்றது எனப் பேசினார். இந்த நிகழ்ச்சியின் இறுதியாக மரக்கன்று நடப்பட்டது.