Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா… 40 லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு… மாவட்ட ஆட்சியர் தகவல்…!!!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வருகிற 24-ம் தேதி தொடங்கி டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் பற்றி அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் கலந்துகொண்டு பேசியுள்ளார் அப்போது அவர் கூறியதாவது, கார்த்திகை தீப திருவிழாவில் இந்த வருடம் அதிகபட்சமாக 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கு தகுந்தார் போல் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் தீபத்திருநாளில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

கோவில் வளாகம் மற்றும் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும் கடந்த இரண்டு வருடங்களாக 5 தேர்களும் இயக்கப்படவில்லை. பணித் துறை அதிகாரிகள் மூலமாக 5 தேர்களையும் இரண்டு முறை ஆய்வு செய்து சான்று வழங்க வேண்டும் மேலும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் முருகர் தேரை வெள்ளோட்டம் பார்க்க வேண்டும். கடந்த கால அனுபவங்கள் மூலமாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற நிகழ்வுகளை மனதில் கொண்டு புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும். மேலும் தீப திருவிழாவிற்கு 52 இடங்களில் அன்னதானம் வழங்கலாம் இதற்கான இடத்தை தேர்வு செய்த ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோர்ட் உத்தரவுப்படி தீபத்திருநாளில் மலை மீது ஏறுவதற்கு 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2,700 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. சிறப்பு ரயில்களும் இயக்குவது பற்றி பரிந்துரைக்கப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |