Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா… சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி டிச.6 -ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 சிறப்பு ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் வருகிற டிசம்பர் மாதம் 6 , 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் முதன்மை செயலாளர் கே.கோபால் கூறியுள்ளார்.

இந்நிலையில் திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் மற்றும்  4 கூடுதல் தற்காலிக பேருந்து நிறுத்தங்களை போக்குவரத்து துறை அமைச்சர் செயலர் கே.கோபால் திங்கட்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து தீப திருவிழாவிற்காக சேலம், காஞ்சிபுரம், வேலூர், புதுச்சேரி, சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம், கும்பகோணம், திருச்சி, கடலூர், கோவை, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளுக்கு 6500 நடைகள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் பக்தர்கள் சிறப்பு பேருந்துகளின் இயக்கம் பற்றிய தகவல்களை 9445456040, 9445456043 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |