திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 5ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை பீச் ஸ்டேஷனில்மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12 மணிக்கு சென்றடையும். மீண்டும் மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு அங்கிருந்து ரயில் புறப்படும். புதுச்சேரியில் இருந்து டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு புறப்படும் ரயில் திருவண்ணாமலைக்கு இரவு 10.30 மணிக்கு சென்றடையும். மயிலாடுதுறையில் இருந்து டிசம்பர் 6ஆம் தேதி 6 மணிக்கு திருவண்ணாமலை ரயில் புறப்படும்.
அதனைப் போலவே கடலூர் திருப்பாதிப்பூரிலிருந்து டிசம்பர் 6ஆம் தேதி இரவு 8.50 மணிக்கு, சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து டிசம்பர் ஆறாம் தேதி மாலை 6 மணிக்கு, புதுச்சேரியில் இருந்து டிசம்பர் 6ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு, வேலூரில் இருந்து டிசம்பர் 7ஆம் தேதி காலை 1.30 மணிக்கு, மயிலாடுதுறையில் இருந்து டிசம்பர் 7ஆம் தேதி காலை 6 மணிக்கு, கடலூர் திருப்பாதிப்பூரிலிருந்து டிசம்பர் 7ஆம் தேதி இரவு 8.50 மணிக்கு, சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து டிசம்பர் 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு, புதுச்சேரியில் இருந்து டிசம்பர் 7ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு, வேலூரில் இருந்து டிசம்பர் 8-ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு என தொடர்ந்து ரயில்கள் இயக்கப்படும் எனவும் மீண்டும் பயணிகள் சென்றடைய ஏதுவாக திருவண்ணாமலையிலிருந்து இந்த ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.