Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி கிரிவலம்…. 6000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அதிரடி….!!!!

திருவண்ணாமலையில் கொரோனா காரணமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 16ம் தேதி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 6000 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பௌர்ணமி விழா நடைபெறுவதால் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கவும், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு கருவிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |