Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம்…. 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!!!!

திருவண்ணாமலையில் கொரோனா காரணமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 16ம் தேதி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 6000 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் மூன்று நாட்கள் தலா 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தேவைப்பட்டால் மக்களின் வசதிக்காக திருச்சி, சேலம், கடலூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க தயார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பௌர்ணமி விழா நடைபெறுவதால் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கவும், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு கருவிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |