தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இதையடுத்து சற்றுமுன் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. இந்நிலையில் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி க்கு போட்டியாக திமுக சார்பில் சம்பத்குமார் களமிறங்குகிறார். அமைச்சர் எஸ்.பி வேலுமணி எதிர்த்து தொண்டாமுத்தூரில் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி, கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் போட்டி, செபிப்பக்கம் திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் களமிறங்குகிறார். காட்பாடி தொகுதியில் துரைமுருகன் மீண்டும் போட்டியிடுகிறார்.