13 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை பூந்தமல்லியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், குஜராத் பிரதமராக இருந்த மோடி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போரை நிறுத்தக்கோரி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ராஜபக்சே ஒரு இனப்படுகொலையாளன் என்பதைப்போல கோத்ரா சம்பவத்தில் மோடியும் ஒரு இனப்படுகொலையர் தான்.
பிரதமர் நரேந்திர மோடி திடீர் என்று வந்து இரண்டு திருக்குறள் பேசியவுடன் மோடியின் தமிழ்ப் பற்றுக்கு நமது ஆட்கள் தலைவணங்கி விடுவார்கள். இந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டி வரும் என்பதால் தான் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போனார் என்றும் அவர் கூறியுள்ளார்.