தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அந்த வைரஸ் வேகம் தற்போது அதிகரித்துள்ளது.
அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புத்தாண்டையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் 31-ஆம் தேதி நள்ளிரவு 12 முதல் அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய பணிக்காக செல்லும் வாகனங்களை தவிர்த்து பிற வாகனங்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். ஒன்று கூடி புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம். ஓட்டல்கள் தங்கும் வசதிகளுடன் கூடிய உணவகங்கள் 11 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.