திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 4000யை கடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்ததால் மொத்த பாதிப்பு 4 ஆயிரத்து 139ஆக அதிகரித்துள்ளது. இன்று இன்று ஒரே நாளில் 161பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக ஆவடி 37 பேருக்கும், வில்லிவாக்கத்தில் 23 பேருக்கும், பூந்தமல்லியில் 15 பேருக்கும் பாதிப்பு உறுதி ஆகி இருக்கிறது.
கடந்த கடந்த மாதம் இதேநாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 025 ஆக இருந்தது. ஆனால் இன்றைய நிலவரப்படி அது 4000மாக இருக்கிறது. இதில் சற்று ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயமாக பார்க்கப் படுவது என்னவென்றால் 2504 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 74 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள்.