Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்து இருந்தது.

சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  460 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மாண்டஸ் புயல் புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை (9ஆம் தேதி) நள்ளிரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  புயல் கரையை கடக்கும்போது நாளை நள்ளிரவு முதல் 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகம், புதுவை, தெலுங்கானாவின் ராயலசீமா, காரைக்காலுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை ரெட் அலர்ட் விடுத்துள்ளது.. இந்நிலையில் மாண்டஸ் புயல் நெருங்குவதால் அதீத கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (09.12.2022) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

முன்னதாக ‘மாண்டஸ்’ புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும், நாளையும் பள்ளி  மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |