Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருவாடானை சட்டமன்ற தொகுதி… நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள்… வெற்றி பெற்ற தேசிய காங்கிரஸ் வேட்பாளர்…!!

திருவாடானை சட்டமன்ற தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கருமாணிக்கம் வெற்றி பெற்றுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,87,875 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 68.75% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கருமாணிக்கம் 79,364 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார்.

மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆணிமுத்து 65,512 வாக்குகள் பெற்றுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்ட வி.டி.என். ஆனந்த் 33,426 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட க.ஜவகர் 16,501 வாக்குகள் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கருமாணிக்கம் தலா 13,852 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் ஊரடங்கு விதிமுறைகளுடன் பாதுக்காப்பாக தனது குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளனர்.

Categories

Tech |