Categories
மாநில செய்திகள்

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை சம்பவம்….திடீர் திருப்பம்….!!

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் மிரட்டி டிக்கெட் கவுண்டரில் இருந்து 1.32 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பணத்தை ரயில்வே ஊழியர் திருடிவிட்டு கொள்ளையர்கள் திருடி விட்டதாக நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. மேலும் அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ரயில்வே ஊழியர் தனது மனைவியை வரவழைத்து திருடிய பணத்தை கொடுத்து அனுப்பியதும் தெரிய வந்துள்ளது. திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை காலை 4.30 மணி அளவில் டிக்கெட் எடுப்பதற்காக பொதுமக்கள் வெகு நேரமாக காத்திருந்தோம் டிக்கெட் கவுண்டர் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் ரயில்வே காவல்துறைக்கு தகவல் அனுப்பினர். இந்த தகவலின் பேரில் டிக்கெட் கவுண்டருக்கு வந்த ரயில்வே காவல்துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது ரயில்வே ஊழியர் டீக்கா மீனா கை கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவரை மீட்டு போலீசார் விசாரித்தபோது கொள்ளையர்கள் தன்னை கட்டிப் போட்டுவிட்டு பணத்தை திருடிச் சென்றதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ரயில்வே டிஐஜி ஜெயகௌரி காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன் ஆகியோர் தலைமையில் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ரயில்வே ஊழியரே பணத்தை திருடிவிட்டு கொள்ளை போனதாக நாடகமாடியது தெரியவந்துள்ளது.

Categories

Tech |