நாடு முழுவதும் நடைபெறும் திருவிழாக்களின் சிறந்த புகைப்படத்தை அனுப்புவோருக்கு மத்திய அரசு விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இமாச்சல மாநிலம் தொடங்கி உத்தரகாண்ட்,சத்தீஸ்கர் என அடுத்தடுத்து மாநிலங்களில் நடைபெறும் திருவிழாக்களை பட்டியலிட்டு பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்தியாவில் பொம்மை தயாரிப்பு தொடர்பான படங்களை தான் பதிவேற்றம் செய்துள்ளதாக வானொலியில் மோடி கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவில் பொம்மை தயாரிக்கும் தொழிலில் புதிய புதிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன எனவும் இனிவரும் நாட்களில் நாடு முழுவதும் நடைபெறும் திருவிழாக்களின் சிறந்த புகைப்படத்தை அனுப்புவோருக்கு மத்திய அரசு விருது வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.