வாலிபரை தாக்கிய 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் அதே பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திருவிழாவில் நின்று கொண்டிருந்த சில வாலிபர்கள் முருகேசனிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் முருகவேல், ஜோதிமணி, சண்முகம், தண்டபாணி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.