Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற சிறுவன்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலுக்கு கோவில் திருவிழாவிற்கு வந்த சிறுவன் குளத்து நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தேவகோட்டை தலுதனூர் கிராமத்தில் வசித்து வரும் கண்ணனும், அவருடைய மகன் சபரி சித்துவும் (11) வந்துள்ளனர். அங்கு சபரி சித்து தனது நண்பர்களுடன் கோவில் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் குளத்து நீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து சபரி சித்துவின் நண்பர்கள் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்து நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டனர். ஆனால் நீரில் மூழ்கியதில் சிறுவன் பரிதாபமாக இறந்து விட்டான். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் திருவிழாவிற்கு வந்த சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |