Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்…!!

மின்சாரம் பாய்ந்து சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பூவகிழவன்பட்டியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆவாரம்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவை பார்ப்பதற்காக சிறுமி தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நள்ளிரவு 1 மணிக்கு திருவிழாவில் நாடகம் பார்த்துவிட்டு தீபா உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது சாலையோரம் ட்யூப்லைட் கட்டியிருந்த இரும்பு கம்பி வேலியை சிறுமி தொட்டதாக கூறப்படுகிறது. இதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிறுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |