பெண்ணை கற்பழித்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுகந்திபுரம் கிராமத்தில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுகன்யா கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சாப்பிடுவதற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சுகன்யா வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். இந்நிலையில் சுகன்யா அதே பகுதியில் அமைந்துள்ள முந்திரி காட்டில் கற்பழித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் குற்றவாளிகளை உடனடியாக கண்டு பிடிக்க தனிப்படை காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சுகன்யாவை கற்பழித்து கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த தேவா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தேவாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.