Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற மாணவர்கள்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வருண் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வருண் தனது நண்பர்களுடன் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்ற மற்றும் நள்ளிரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இவர்கள் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் புதுதோட்டம் எஸ்டேட் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பு மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வருணை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வருண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |