தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழச்சாலூர் கிராமத்தில் மூக்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோமதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து வந்த மூக்கன் தனது உறவினர் ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மூக்கன் அதே பகுதியில் அமைந்துள்ள ஊருணியில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது திடீரென அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மூக்கனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.