Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருவிழாவிற்கு வந்த மாணவர்கள்…. திடீரென ஏற்பட்ட மோதல்…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!

கோவில் திருவிழாவின்போது மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எடப்பாளையம் கிராமத்தில் எட்டியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் முருகன் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். இதேப்போன்று திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரும் நண்பர்களுடன் கோவிலுக்கு வந்துள்ளார். இந்த கோவிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் பார்த்திபனும், ஆகாஷும் எதிர்பாராதவிதமாக சந்தித்துள்ளனர். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் மற்றும் பார்த்திபன் தரப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் பார்த்திபன், ஆகாஷை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் ஒரு அரிவாளை எடுத்து பார்த்திபனை பலமாக வெட்டியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்குமிங்குமாக அலறியடித்து ஓடினர். அதன்பிறகு பார்த்திபனை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பார்த்திபனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மயிலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த ஆகாஷை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து  காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆகாஷ் மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |