Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“திருவிழா பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த இளைஞர்கள்”… மோட்டார் சைக்கிள் மோதியதால் இளைஞர் உயிரிழப்பு…!!!

மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி தாலுகாவுக்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் 24 வயதுடைய வேல்முருகன்.

இவரும் இவரது உறவினர் ஹேமநாதனும் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற நாடு செலுத்துதல் விழாவில் கலந்துகொண்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது ஆலவயல் வேட்டைக்காரன் சுவாமி கோவில் அருகில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஆனது ஹேமநாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் வேல்முருகன் தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Categories

Tech |