Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“திருவெண்ணெய்நல்லூரில் இருக்கும் 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை”…. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு வீடுகளிலிருந்து 5 லட்சம் மதிப்புள்ள நகைக, பணங்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகே இருக்கும் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் வாழ்ந்து வருபவர் பிலிப் மகன் சவுரி ஆரோக்கிய ராஜ். இவர் தனது தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதை கண்காணிக்க மர்ம நபர்கள் அவர் சென்ற பின் அதிகாலை நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் பித்தளை பாத்திரங்களை கொள்ளையடித்து சென்றிருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து அருகிலிருக்கும் அந்தோணிசாமி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 2000 ரூபாயை கொள்ளையடித்ததோடு ஆனந்தராஜ் என்பவரின் வீட்டில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றுள்ளனர் மர்ம நபர்கள். இதுகுறித்து தனித்தனியே புகார்கள் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தற்போது கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள்.

 

Categories

Tech |