Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியை திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும் கைப்பற்றியுள்ளனர். காங்கிரஸ், சிபிஎம், தேமுதிக தலா ஒரு முறை வென்றுள்ளது. தொகுதியின் தற்போதய எம்.எல்.ஏ  திமுகவின் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திருவெரும்பூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,91,891 ஆகும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெல் தொழிற்சாலை முடங்கிப்போய் உள்ளதால் அப்பகுதியில் சிறு குறு தொழிற்சாலைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஏராளமானோர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொன்மலை ரயில்வே பணிமனையில் வெளிமாநில இளைஞர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழர்கள் புறக்கணிக்கபடுவதாகவும் புகார் உள்ளது. நீண்ட கால கோரிக்கையாக இருந்த பால்பண்ணை துவாக்குடி சர்வீஸ் சாலைக்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், விரைந்து முடிக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். நகரமும், கிராமமும் கலந்த பகுதியான  திருபெரும்புதூர் தொகுதியில் சாலை, குடிநீர் தட்டுப்பாடு, தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை என்பது மக்களின் வருத்தமாக உள்ளது.

Categories

Tech |