Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருவொற்றியூரில் பெரும் பரபரப்பு தகவல்…! உடனே அதிரடி காட்டிய போலீஸ்… வசமாக சிக்கிய சப்- இன்ஸ்பெக்டர் மகன்…!!

திருவொற்றியூர் பகுதியில் மெத் ஐஸ் என்ற போதைப்பொருள் விற்பனை தொடர்பாக  சப்- இன்ஸ்பெக்டர்  மகன்  கைது  செய்யப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னை மாவட்டம்  திருவொற்றியூர் பகுதியில் மெத் ஐஸ் என்ற போதைப்பொருள் விற்பதாக வடசென்னை இணை கமிஷனருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து திருவொற்றியூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது  மெத் ஐஸ் என்ற போதைப்பொருளை விற்ற  புது வண்ணார்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வரும் மணிகண்டன், ராயபுரத்தில் வசித்து வரும் காதர்மொய்தீன் , தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் வசித்து வரும் நாகூர் அனிபா மற்றும் பெரம்பலூர் தில்லை நகரில் வசித்து வரும் ஷேக் முகமது ஆகிய 4 பேரை போதை பொருள் கடத்தல் தொடர்பாக போலீசார் கைது செய்தனர். இதில் கைதான மணிகண்டன் புது வண்ணார்பேட்டை காவல்நிலையத்தில் பணிபுரியும்  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |